September 30, 2024
உலகம்

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள Google

பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. 

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

பேஸ்புக், வாட்ஸ்அப்,  இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 

இவ்வாறு 2022 ஆம் ஆண்டில் இதுவரை 1,35,000  ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கூகுள் (Google) நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet பல மாதங்களாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

யாரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் போவதில்லை. பணியாளர்களின் செயல் திறன்கள் கண்காணிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டில் 10,000 ஊழியர்கள் வரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

tamilinzone.com

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video
X