September 30, 2024
இலங்கை

சீன கப்பல் 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் நாளை வருகிறது

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26) வந்தடையும். சீனாவில் இருந்து புறப்பட்ட ‘சூப்பர் ஈஸ்டன்’  கப்பல் தற்போது சிங்கப்பூர் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.   விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவினால் இந்த டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது இந்த கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. tamilinzone.com

Read More
இலங்கை

அடுத்த வருடம் இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது தொடர்பில் விசேட அறிவிப்பு

sri lanka education இலங்கையில் அடுத்த வருடம் பாடசாலைகளுக்கான விடுமுறை வழங்கப்படுவது தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை அறிவித்துள்ளார். இதன்போது அவர் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விடுமுறை காலத்தை குறைத்து, கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கான காலத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் பாடசாலைகளில் டிசம்பர் 2ஆம் திகதி முடிவடையும். அதேவேளை மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் […]

Read More
இலங்கை

புதிய ஆண்டின் இறுதியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீட்சியை நோக்கி பயணிக்கும்

Srilanka 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீட்சியை நோக்கி பயணிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பொருளாதார சீர்திருத்தங்களை கருத்திற்கொண்டு மத்திய வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.  எவ்வாறாயினும், அரசியல், தேர்தல் செயல்முறைகள் தொடர்பான மாற்றங்களின் விளைவுகள் இல்லாமல் இந்த நோக்கத்திற்காக  அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட வேண்டும் […]

Read More
X